ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை..!

37
534
ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை..!
Advertisement

ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை..!

Advertisement

ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு,

இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும்.

சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும்.

ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட,

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

முதற் கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதையடுத்து, கடந்த 5-ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக கடந்த 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

“வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்” என தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்திருந்தார்.

ஆனாலும், அன்றைய தினம் அவர்கள் போராட்டத்தை நடத்தினர். இதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் வகுப்புகள் முடங்கியது.

எங்களை அழைத்து அரசு பேச வேண்டும் என கோரிக்கை விடுத்த அந்த அமைப்பினர், ஒருவேளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால்,

வருகிற செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவோம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர்ந்து, நடைபெற்ற ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும்.

ஏழாம் தேதியன்று வட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். செப்டம்பர் 8-ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும்.

தமிழக அரசு  ஜாக்டோ ஜியோ தலைவர்களை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால்

செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ  உயர்மட்டக்குழு கூட்டம் கூடி தீவிரமான அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்பார்கள் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதனிடையே, தமிழக அரசுடன் அந்த அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வருடன் ஈரோட்டில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதல்வர் அளித்த நம்பிக்கையை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் சில பிரிவுகள் அறிவித்தன. ஆனால், அதற்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. அதேசமயம், அந்த அமைப்பின் சில பிரிவுகள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்தனர்.

அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன் மீது இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம், வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆயுதமாக கையாளக் கூடாது.

வேலைநிறுத்தம், அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை கிடையாது. இதனால், பணிகள், போக்குவரத்து முடங்கும் அபாயம் உள்ளது.

மாணவர்களின் படிப்பு பாதிக்கும் சூழல் உள்ளது என அறிவுறுத்தியது.

மேலும், போராட்டம் தொடர்பாக அதில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் பதில்தரவும், அதேபோல், தலைமைச் செயலர் மற்றும்

 உள்துறை செயலர் ஆகியோரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.