நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்..!

நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்..!
Advertisement
Advertisement

அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறாக நடத்த முயன்றதாக ஆடியோ வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில் மதுரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளிடம் ஒத்துழைக்குமாறு மூளைச் சலவை செய்யும் வகையில் பேசியிருந்தார்.

இதையடுத்து அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் ஆகியோர் கேட்டுக் கொண்டதால், மாணவிகளை தவறாக நடத்த முயற்சித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் 200 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் நிர்மலா தேவிக்கு, பலமுறை ஜாமீன் கேட்டு மனு அளித்தும் வழங்கப்படவில்லை.

இந்த சூழலில் சிறையில் நிர்மலா தேவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று ஆஜரானார்.

அப்போது அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.

பின்னர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்,

ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் உடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.