ம.பியில் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா…!

ம.பியில் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா...!
Advertisement
 மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோராது என்று அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Advertisement

 

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மொத்தம் 230 தொகுதிகள் மத்திய பிரதேசத்தில் உள்ளது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை.

தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக இரண்டு கட்சிகளும் மெஜாரிட்டி பெறுவதற்கான இடங்களில் வெற்றிபெறவில்லை.

மத்திய பிரதேசத்தில், பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. இதற்காக இன்று மதியம் ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தருவதால் காங்கிரஸ் ஆட்சி உறுதியாகி உள்ளது.

நேற்று இரவே காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர ஆசைப்பட்ட ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டது. ஆனால் ஆளுநர் அப்போது நேரம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர போவதில்லை.

ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளேன் , இன்று மதியம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.