அடையாளங்களை தொலைக்கும் தமிழன்..! – அழிந்துவரும் தமிழ் இனம்..!! நீயும் தமிழனா??

33
1335
தமிழன்
Advertisement
Advertisement

நேற்றைய தினம் நாளை இல்லை, அப்படியே இருந்தாலும் கூட அது நாகரீகத்தால் மாறிப்போய் விடும் என்பது தெரிந்தவிடயம் தான்.தமிழன்

“அம்மா, அப்பா தம்பி எல்லோருக்கும் புது வருட வாழ்த்துக்கள், நான் இங்கு இல்லை என்று கவலைப்பட வேண்டாம்… எப்போதும் உங்கள் அன்பு கலந்த ஆசீர்வாதம் துணை இருக்கும்”

வெளிநாட்டில் வேலை செய்தாலும் கூட சம்பிரதாயப்படியே பாற் பொங்கி புது வருடத்தை வரவேற்றோம் அம்மா….,”

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் கூட ஒரு பிள்ளை தன் குடும்பத்திற்கு எழுதிய கடித வரிகளை ஒத்தது. இதில் அன்பு, மரியாதை, அடக்கம், பாரம்பரியம் போன்ற போன்ற அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன.

ஆனால் இப்போதைய நிலையில் இது இருக்கின்றதா?? நிச்சயமாக இல்லை நாகரீகமாக குறுஞ்செய்தியில் வாழ்த்து செய்தால் தான் மரியாதை. இல்லா விட்டால் அது நாகரீகமாகாது என மாறிவிட்டது.

தன்னுடைய பிறந்த நாள் அன்றும் அன்னையிடம் ஆசீர்வாதம் வாங்காதவர்கள் (ஒரு சிலர்) முக நூலே கண்டு அறியாத அன்னையின் புகைப்படத்தை முக நூலில் போட்டு கொண்டாடும் புதுப் பாரம்பரியம் புகுந்து விட்டது.

எதற்காக இந்த போலி நாடகம்?? நேரில் காணும் நண்பனை விட்டு விட்டு சாட்டில் (chat) மட்டுமே நட்பு தொடரும் காலமே இப்போது தொடருகின்றது. இதுவா நம் தமிழர் பண்பாடு வெட்கம் கொள்ள வேண்டும்.

மாறிப்போகும் காலத்தோடு மாறிவருகின்றது எம் பண்பாடு. நவ நாகரிக வளர்ச்சி என்ற ஓர் போர்வை தமிழர் நம்முடைய அடையாளங்களை மறக்கவும், மறைத்தும் கொண்டிருக்கின்றது.

இது தெரிந்தும் பண்பாடு பண்பாடு என வெட்டிப்பேச்சுக்கு மட்டும் குறைவில்லை. நிலை மாறலாம் தடம் மாறலாம் தமிழர் பெருமை பாரம்பரியம் மாறலாமா???

இங்கு நான் மாற்றத்தையும் நாகரீகத்தையும் குறை சொல்ல வர வில்லை எல்லா வகையிலும் அது நன்மைக்கே ஆனாலும் அதனால் அந்த மோகத்தால்..,

தமிழ் மொழியோடு கலாச்சாரம், பண்பாடு விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன்.

அப்போது, அதாவது நம் முன்னோர்கள் தமிழர் காலாச்சாரத்தில் பல பாரம்பரியங்களை கட்டிக்காத்தனர் ஆனால் இன்று இருக்கின்றதா? அவை காக்கப்படுகின்றதா??

விருந்தோம்பல் கூட வேவையில்லை தமிழர் பாரம்பரிய உணவு முறை இப்போது தமிழர்களிடன் இருக்கின்றதா? இல்லை என்பது கொஞ்சம் வேதனைத்தான் அன்றாடம் வேண்டாம் வருடத்திற்கு ஒரு முறையாவது.

இருக்கமான உடையணிந்தால் தான் சிறப்பு, வனப்பு ஆனால் பாரம்பரிய உடையணிந்தால் அது வெட்கம் இது தான் இப்போதைய தமிழர், கட்டு வேட்டி போய் ஒட்டு வேட்டியில் வந்து நிற்கின்றது தமிழர் பண்பாடு.

முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட நாம் பாதுகாப்பது இல்லை. சுத்தப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பழைய பொருட்கள் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை எரிக்கின்றோம். அத்தோடு எமது பொறுமையையும் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

இங்கு நாம் தீயிடுவது பொருட்களுக்கு மட்டுமல்ல எம் முன்னோர்களின் நம்பிக்கையை, அடையாளங்களையும் சேர்த்தே.

இன்று தமிழன் என்ற போர்வையில் போலி வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இது அவரவர் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். வெளியே சொல்ல வேண்டாம் எமது இனத்தை நாமே கேவலப்படுத்துவது போலாகி விடும்.

தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம். அல்ல அல்ல இப்போது அழித்துக் கொண்டே வருகின்றோம்.

நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்கள் பாரம்பரியங்களையும், வருங்கால சந்ததிகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.

தமிழருக்கே உரிய அடையாளங்களை தொலைத்துக் கொள்ள வேண்டாமே. இல்லாவிடின் பிறக்கும் உண்மையான தமிழ் குழந்தை நீயும் தமிழனா ? என்ற கேள்வியை கேட்டு விடும்.

2000 வருடங்கள் அல்ல 20000 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று தமிழர் பெருமையை நாம் பேசிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது.

வாய் சொல்லில் மட்டும் வீரம், திமிர், பெருமை பேசிக் கொண்டு இருந்தால் போதாது அது எமக்கு உரியது இல்லை முன்னோர்களின் சொத்து அதனை காப்போம் அல்லது தமிழ் இனமே அழிந்துப்போகும்…,

தமிழன்