உடல்மொழி….! நல்லதையே நாம் அறிவோம்….!

0
116
உடல்மொழி....! நல்லதையே நாம் அறிவோம்....!
Advertisement
Advertisement

மூட்டுகளில் கை வைத்திருத்தல் : ஆர்வத்தைக் குறிக்கிறது.

இடுப்பில் கை வைத்திருத்தல் : பொறுமை இல்லாமையைக் குறிக்கிறது.

முதுகுக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : சுயக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.

தலைக்குப் பின்புறம் கை கட்டுதல் : நம்பிக்கையாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.

நாற்காலியின் ஒரு கைப்பிடியின் மேல் ஒரு காலைப் போட்டு உட்கார்தல் : கவனமின்மையைக் குறிக்கிறது.

குறிப்பிட்ட திசையில் பாதமும் கால்களும் வைத்திருத்தல் : அவருக்கு அதிகமாக ஆர்வமுள்ள திசையைக் குறிக்கிறது

கை கட்டியிருத்தல் : இணங்கிப் போகும் தன்மையைக் குறிக்கிறது.

கன்னத்தினை தேய்த்து கொண்டு இருந்தால் : முடிவெடுக்க போகும் தருணத்தை குறிக்கிறது.

விரல்களால் தாளம் தட்டினால் : பொறுமையின்மையை குறிக்கிறது.

தலையினை அசைக்காமல் உற்று கவனித்தால் : அதிக கவனம் செலுத்துவதை குறிக்கும்.

பின் தலையை சொறிந்தால் : நம்பிக்கைகுறைகிறது என்று அர்த்தம்.

விரல்களை முகம் அருகில் கோர்த்து கொண்டு இருந்தால் : அதிகாரம் செலுத்துவதை குறிக்கும்.

உடல்மொழி என்பது ஒரு வகையான சொல்லிலாத் தகவல்தொடர்பு ஆகும், இதில் தனிப்பட்ட பாணியிலமைந்த உடல் அசைவுகள்,

உடலின் நிலைகள் மற்றும் மற்றவர்களுக்கு அறிவிக்கும் அடையாளங்களாகப் பயன்படும் உளவியல் குறிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

மனிதர்கள் சில நேரம் தங்களை அறியாமல் எப்போதுமே சொல்லிலா வகை சைகைகளை வெளிப்படுத்திக்கொண்டு பெற்றுக்கொண்டும் உள்ளனர்.

   தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119