இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்..!

38
769
இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்..!
Advertisement

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்..!

Advertisement

இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – 50 கிராம்,

கேழ்வரகு மாவு – 200 கிராம்,

உப்பு – சுவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் – 10,

தயிர் – கால் கப்,

தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை:

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதல் நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து (புளிப்பதற்காக) மூடிவைக்கவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

* அரைப் பதத்தில் வெந்ததும், அதனுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

* தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

* பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துப் பருகவும்.

* உடலுக்கு குளிர்ச்சி தரும் கூழ் இது.