பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை

25
639
பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை
Advertisement

பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை

 
தேவையானது :- பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை
 
பச்சைப் பயறு – அரை கப், 
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
காய்ந்த மிளகாய் – 2, 
தேங்காய்த் துருவல் – கால் கப், 
கடலெண்ணெய் (பூரணத்துக்கு) – 2 டீஸ்பூன், 
பச்சரிசி மாவு – ஒரு கப், 
கடலெண்ணெய் (மேல் மாவுக்கு) – ஒரு டீஸ்பூன், 
உப்பு – ஒரு சிட்டிகை, 
தண்ணீர் – 2 கப்.
 
செய் முறை:-
 
முதலில் பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் குக்கரில் பயறைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும். 
 
வனலியில் உப்பு, தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.
 
மாவு கெட்டியான பின் அடுப்பை அணைக்கவும். இன்னொரு கடாயில் 2 டீஸ்பூன் கடலெண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்க்கவும். 
 
கடுகு வெடித்தவுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை சேர்க்கவும். பின்னர் வேகவைத்திருக்கும் பச்சைப் பயறைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும்.
 
வெந்த மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து, கைகளால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் பச்சைப் பயறு பூரணத்தை வைத்து மூடி கொழுக்கட்டைகளாக செய்யவும். 
 
இப்படி எல்லாவற்றையும் செய்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை தயார்.
Advertisement