கிருஷ்ணர் ஜெயந்தி வழிபாடு முறைகள்.!

33
1461
கிருஷ்ணர் ஜெயந்தி வழிபாடு முறைகள்.!
Advertisement

கிருஷ்ணர் ஜெயந்தி வழிபாடு முறைகள்.!

Advertisement

                                             

கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.

நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால், பெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம். ஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன். 

ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்…தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய்,

அரசனாய், சீடனாய், மந்திரியாய்,  நல்லாசிரியனாய், தெய்வமாய்,  சேவகனாய்…எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான்.

அவனது அவதார நன்னாளில்,  மகாகவி பாரதியார் பாடிய கண்ணன் பிறப்பு பாடலை நாமெல்லாம் பாடி மகிழ்வோமா!

வழிபாடு முறைகள்

கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை கண்ணனின் திருப்பாதங்களைப் பச்சரிக்கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்கின்றனர்.

இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.

அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

                                                             

பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான,

தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.

வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி,

பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள்.

யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைத்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்.

நீங்களும் கிருஷ்ணனை வழிபட்டு அருள் பெறுங்கள்..!

தகவல்கள்: மித்ரா