கேரளாவில் மதுவிலக்கு வாபஸ்..!

0
239
கேரளாவில் மதுவிலக்கு வாபஸ்..!
Advertisement

கேரளாவில் மதுவிலக்கு வாபஸ்..!

Advertisement

கேரளாவில் மதுவிலக்கை வாபஸ் பெற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை முடிவை அடுத்து மூடப்பட்டுள்ள 730 மதுபான பார்கள் திறக்கப்பட உள்ளன.

கேரள சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தல்வர் பினராய் விஜயன் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கேரளாவில் மதுவிலக்கை வாபஸ் பெற மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அமைச்சரவை முடிவை அடுத்து மூடப்பட்டிருந்த 730 மதுபான பார்கள் திறக்கப்பட உள்ளன.

கேரள மதுபான கூடங்களில் கள் விற்பனை செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரள அமைச்சரவையின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.