கீர்த்தி- மஞ்சிமா டிஸ்யூம்.. டிஸ்யூம்..!

30
611
கீர்த்தி- மஞ்சிமா
Advertisement
Advertisement

கீர்த்தி சுரேஷின் முதல் படமான ரஜினி முருகன், ஏராளமான இழுபறிக்கு பின் ரிலீஸ் ஆகி இருந்தாலும், பம்பர் ஹிட் ஆனதால், பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்துவிட்டது அவரது மார்க்கெட்.

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேர்ந்த ரெமோவின் ஹிட் உச்சத்தில் வைத்தது. அடுத்து என்ன?  

கோலிவுட்டில் அத்தனை ஹீரோக்களையும் வசியம்செய்ததுபோல் வரிசையாக படங்களை வசப்படுத்தி வருகிறார்.

அதேபோல்  கடவுளின் தேசத்திலிருந்து கோலிவுட்டிற்கு பாய்ந்து வந்து முதல் படத்திலேயே செமஹிட் அடித்திருக்கிறார் மஞ்சிமா மோகன்.  

அடுத்தடுத்து இவருக்கும் படங்கள் வரிசை கட்டுகின்றன.

இதுதான் ஆளே இல்லாத ஊரில் அலட்டிக்கொள்ளாமல் டீ ஆத்தலாம் என்ற கனவில் இருந்த கீர்த்திக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபோதாதா? அம்மணிகளுக்குள் ஈகோ யுத்தம் ஸ்டார்ட்!

இருவரையும் சேர்த்து பார்ட்டிகளுக்கு அழைத்தால் கூட வர மறுக்கிறார்களாம்!