காட்பாடி-சேலம் பயணிகள் ரயில் அரக்கோணம் வரை நீட்டிப்பு..!

0
106
காட்பாடி-சேலம் பயணிகள் ரயில் அரக்கோணம் வரை நீட்டிப்பு..!
Advertisement
Advertisement

காட்பாடியிலிருந்து சேலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் இன்று முதல் அரக்கோணம் வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

காட்பாடியிலிருந்து சேலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலை அரக்கோணம் வரை நீடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுகொண்ட ரயில்வேதுறை, பயணிகள் ரயிலை அரக்கோணம் வரையில் நீட்டிப்பு செய்து ஆணையிட்டது.

இதன்படி இன்று அதிகாலை 4.40 மணிக்கு அரக்கோணத்திலிருந்து சேலத்திற்கு பயணிகள் ரயில் புறப்பட்டது.

சோளிங்கர் வாலாஜாரோடு, முகுந்தராயபுரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் இந்த ரயில், காட்பாடியிலிருந்து 6.05 மணிக்கு புறப்பட்டு, 11.15 மணிக்கு சேலம் சென்றடையும்.

இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயங்கும். சனிக்கிழமைகளில் இயக்கப்படமாட்டாது.

இதே போல் சேலத்திலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 10.30 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

இதன் மூலம் விடியற்காலை அரக்கோணம் – காட்பாடி வரும் பயணிகளுக்கும், சேலம் செல்பவர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இந்த ரயிலை நீட்டித்த மத்திய அரசுக்கும், ரயில்வேதுறைக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.