கார்த்திகை தீபத்திருவிழா மகா தோரோட்டம்

பஞ்ச ரகங்களும் பவனி வந்தன

0
280
Advertisement
Advertisement

கார்த்திகை தீபத்திருவிழா  7 ம் நாளான மகா தோரோட்டம் பஞ்ச ரகங்களை தரிசிக்க திரண்ட பக்தர்கள்.

திருவண்ணாமலை.

திருவண்ணாமல புதன் கிழமை ஏழாம் நாள் தீபத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது தரிசிக்க  ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடந்தது  6 வது நாளான செவ்வாய் கிழமை காலை  10 :00 மணிக்கு  63 நாயன்மார்களுடன் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் மாடவீதி பவனி வந்தன அதனை தொடந்து இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்தில் மாடவீதி உலா வந்தன.

இத் திருவிழா விமரிசையாக நடந்தது வருகிறது விழாவில்  7 ம் நாளான புதன்கிழமை மதியம்  1:30 மணிக்கு பெரிய தேர் எனப்படும் மகா ரதத்தில் உண்ணாமலையம்மன் சமேத  அண்ணாமலையார் பவனி நடைப்பெற்றது.

முன்னதாக காலை  7 மணி முதல் இரவு வரை பஞ்ச ரகங்களும் பவனி வந்தன.தேரோட்டத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இதையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE