மீண்டும் கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள்
Advertisement
Advertisement

விஜய் டி.வியின் புகழ்பெற்ற தொடர் கனா காணும் காலங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொடர் பல சீசன்களாக ஒளிபரப்பானது.

பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை மையமாக கொண்ட தொடர் இது. இந்த தொடரில் நடித்த இர்பான், பால சரவணன் உள்ளிட்ட பலர் பின்னாளில் திரைப்பட நடிகர்கள் ஆனார்கள்.

ஒரு கல்லூரியின் காதல், கல்லூரி சாலை என வேறு சில பெயர்களிலும் ஒளிபரப்பானது. ஆர்.பிரபு கண்ணா, ஜி.அன்பழகன் இயக்கினார்கள்.

சில வருட இடைவெளிக்கு பிறகு இந்த தொடர் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.

வருகிற 16ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதனை விஜய் டி.வி. அறிவித்துள்ளது.

கனா காணும் காலங்கள் புதிய சீசனில் ரசிகர்களுக்கு எதிர்பாரா ஆச்சர்யங்கள் காத்திருப்பதாகவும் விஜய் டி.வி.தெரிவித்துள்ளது.

இந்த தொடர் மூலம் பல இளம் கலைஞர்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். தற்போது இதற்கான படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.