அஜீத் படத்தில் அறிமுகமாகும் இயக்குநரின் மகள்..!

0
134
அஜீத் படத்தில் அறிமுகமாகும் இயக்குநரின் மகள்..!
Advertisement
Advertisement

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், ஹிந்தியில் உருவான பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்க உள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜித் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் புகழ்பெற்ற இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கல்யாணி ‘ஹலோ’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாவர்.