சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு..!

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு..!
Advertisement
Advertisement

ஜி.எஸ்.ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம், லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்புசெய்ததாக கண்டறியப்பட்டது.சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு..!

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டில் ஈடுபட்டது.

தி.நகர், பாடியில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகள், பெரம்பூரில் ரேவதி ஸ்டோர் ஜவுளிக்கடை, பர்னிச்சர், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 74 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 70 வருமான வரித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ரூ.433 கோடி அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

மேலும் கணக்கில் வராத ரூ.25 கோடி ரொக்கப் பணம், 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து நீடிக்கும் வருமான வரித்துறை ரெய்டால், தமிழகத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது.