ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்: 19 பேரை கொன்று உடல் எரிப்பு…!

0
250
ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்: 19 பேரை கொன்று உடல் எரிப்பு…!
Advertisement

ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்: 19 பேரை கொன்று உடல் எரிப்பு…!

Advertisement

உள்நாட்டுப்போர் போர் நடந்துவரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறிச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்: 19 பேரை கொன்று உடல் எரிப்பு…!

இந்நிலையில் 19 பேரைக் கொன்று அவர்களின் உடலை எரித்துள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்தக் கொடூரச் செயலை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு உறுதிசெய்து தெரிவித்துள்ளது.

சிரியாவின் அதிபராக பஷர் அல் ஆசாத் இருந்துவருகிறார். இவரின் ஆட்சிக்கு எதிராகத்தான் கிளர்ச்சியாளர்கள் யுத்தம் புரிந்து வருகின்றனர்.

தற்போது, ஆசாத் தலைமையிலான அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர ஆயுதங்களைக்கொண்டு சண்டைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்தநிலையில் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமான முறையில் கொன்று வருகின்றனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த இருதினங்களில் மட்டும் இரண்டு குழந்தைகள் உட்பட 19 அப்பாவி பொதுமக்களை சிறைப்பிடித்துள்ளனர்.

பின்னர் அவர்களை தலையில் சுட்டுக் கொன்றுவிட்டு உடலை எரித்துள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளும், பெண்களும் அடக்கம்.

தீவிரவாதிகளின் இந்த செயலை அந்தநாட்டில் இயங்கி வரும் இங்கிலாந்க்ச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு உறுதிசெய்துள்ளது.