ஈரோட்டில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டிகள்…!

0
111
ஈரோட்டில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டிகள்...!
Advertisement
Advertisement

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம், ராம்கோ நிறுவனம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் நடத்தப்படும்,

ஈஷா கிராமோத்சவவிளையாட்டு திருவிழாவின் இறுதிப் போட்டிகள் ஈரோட்டில் வரும் 9-ம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித், தமிழக அமைச்சர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு,

ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் இந்திய பளு
தூக்குதல் வீராங்கணை திருமதி.கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில்,

தமிழகத்தில் ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் விளையாட்டு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, 14-வது ஈஷா கிராமோத்சவ திருவிழா இந்தாண்டு கடந்த அக்.20-ம் தேதி தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் க்ளஸ்டர், மாவட்டம், மண்டலம் என பல்வேறு கட்டங்களில் வாலிபால், த்ரோபால், கபாடி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

கபாடி போட்டிகள் தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகத்துடன்
இணைந்து நடத்தப்பட்டது.

இதில் மொத்தம் 3,500 அணிகளும் 40
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற வீரர், வீராங்கணைகளும்
பங்கெடுத்தனர்.

இந்நிலையில், மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் ஈரோடு
மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்வேலியில் வரும் டிச.9-ம் தேதி மிகப்
பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்களுக்கான த்ரோபால்
போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சமும்,

கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முறையே ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

மாலை நடைபெறும் பரிசு அளிப்பு விழாவில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித், தமிழக அமைச்சர்கள்
திரு.கே.ஏ.செங்கோட்டையன்,

திரு.பி.தங்கமணி, திரு.எஸ்.பி.வேலுமணி, திரு.கே.சி.கருப்பணன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் இந்திய பளு தூக்குதல் வீராங்கணை திருமதி.கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருஅவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்க உள்ளார்.

மேலும், ப்ரோ கபாடி தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களும் விளையாட்டு போட்டிகளை காண வருகை தருகின்றனர்.

ஆண்களுக்கான கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி தமிழ் தலைவாஸ் அணியுடன் நட்பு ரீதியாக மோத உள்ளது.

பிரதான விளையாட்டு போட்டிகள் தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் மக்களுக்காக கிராமிய விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் காலை முதல் நடைபெற உள்ளது.

அதில் வழுக்கு மரம், உறி அடித்தல், சிலம்பம், கயிறு இழுத்தல், வில் அம்பு உள்ளிட்ட 15 விதமான கிராமிய விளையாட்டுக்கள்,

வரப்புல ஒய்யார நடை, உள்ளே வெளியே, சாக்கு ஓட்டம், பலூன் உடைத்தல், நொண்டி உள்ளிட்ட 10 விதமான பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன.

இதுதவிர, கரகாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை, கும்மி ஆட்டம் என 10 வகையான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது.

செய்தி: சங்கரமூர்த்தி, 7373141119