அது என்னய்யா பத்திரிகை தர்மம்…?

டூபாக்கூர் செய்தியாளர்

0
226
Advertisement
ஆண்டவரே….! தண்டிக்கப்பட வேண்டிய பாவிகள்…., உமது கருணையால் இரட்சிக்கப்பட்ட காரணத்தால்…!
அந்திம கால பாவங்கள் பல்கிப்பெருகிவிட்டதே, கருணை மிக்கவர்….!, அதுபோல பத்திரிகைகளும் தாறுமாறாக பெருகிய காரணத்தால் பத்திரிகை தர்மமே தரம் தாழ்ந்து விட்டது.

அது என்னய்யா பத்திரிகை தர்மம்…?

உண்மை தான் ஸ்வாமி பத்திரிகை தர்மமாக இருக்க, அந்த பத்திரிகையின் செய்தியாளருக்கு சில தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்…!
ஆனால் அது கடல் மணலில் காணாமல் போன குண்டூசி….. என்றால் அதுமிகையாகாது.
ஒரு செய்தியாளர் திறமை மிக்க செய்தியாளராக விளங்க வேண்டும் என்றால் அவரிடம் சில தகுதிகளும் பண்புகளும் கட்டாயம் இருக்க வேண்டும்.
*  செய்தி மோப்பத் திறன் (Nose for News)
செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம் பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.   (ஆனால் அவர்களது மூக்கு லஞ்சம் வாங்க வியர்க்கிறது) அவர்களிடம் செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவராகவும்.
* செய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும். எல்லாவற்றையும் பற்றி அறிவும் ஆர்வமும் பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆழமான தெளிவு இருந்தால்தான் அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும் ஆழ்ந்தும் முழுமையாகவும் அளிக்க முடியும். ( இந்த அறிவு தற்போது குரங்கு கையில் கத்தியாகி விட்டது)
* செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy) தருகின்ற பண்பு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.
எதனையும் சரிபார்க்காமல் ஊகம் செய்து எழுதக்கூடாது. அப்படி எழுதினால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். ‘எதனையும் முதலில் பெற வேண்டும், அதனையும் சரியாகப் பெறவேண்டும்’ என்பதுதான் செய்தியாளரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
( இதில் எதனை முதலில் பெற வேண்டும் என்பதில் பல ஜில்பி நிருபர்களிடம் பாடம்தான் படிக்கலாம்)
* செய்தியாளர் வியப்பூட்டும் வகையில் விரைவாகச் (Speed)செயல்பட வேண்டும். செய்தித்தாளின் இறுதிப் பக்கம் தயாராகும் முன்பு, திறமையான செய்தியாளர் தான் சேகரித்த செய்திகளை அனுப்புவார். செய்தியைச் சரியாகப் பெறவேண்டும்; உடனேயும் பெற வேண்டும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
( இதில் சிலர் செய்திகளை சில்லறையாக மாற்றுவதில் நிபுணர்கள்)
* நடுநிலை நோக்கு, செய்தி திரட்டும் திறன், மற்றும் மிகுந்த பொறுமைக் குணம் வேண்டும். அவசரப் படவோ பதற்றப் படவோ கூடாது.
* சொந்தமுறை அல்லது தனித்தன்மை, நல்ல தொடர்புகள் (இங்கதான் பல முரண்பாடு சில நிருபர்களுக்கு)
செய்தியாளர் பல தரப்பட்ட மக்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்புள்ளவர் சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும். மக்கள்தாம் செய்தியின் மூலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
செய்தியாளர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்யாகச் செய்தியை உருவாக்குவதோ, கிடைத்த செய்தியை வேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்து விடுவதோ இதழியல் அறமாகாது.
* நேர்மை (Honesty), கையூட்டுப் (லஞ்சம்) பெறாமை, ( இதை பலரிடம் எதிர்ப்பது மிகவும் தவறு)
செய்தியாளர்கள் கையூட்டுக் கருதியோ, வேறு நன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளை மாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர் புகழ் பெறுவதற்காகவும், விளம்பரம் ஆவதற்காகவும் செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள்.
அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கி, செய்தியாளர்களைச் சிலர் விலை கொடுத்து வாங்க முயற்சி செய்வார்கள். செய்தியாளர்கள் இது போன்ற சோதனைகளுக்கு ஆட்படாமல் சாதனைகளைச் செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும். ( ஆனால் இன்று பத்திரிகையாளர்களே மேல் சொன்னவற்றை செய்துவருவது தான் கொடுமை அழைப்பிதழ் படத்தை பார்த்துவிட்டு புரிந்துகொள்ளமுடியுமா…?)
*செயல் திறன், செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும் செயல் படவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் தந்திரத்துடன் பணிகளைச் செய்ய வேண்டும்.
( இதில் நல்ல செய்தியாளர், டூபாக்கூர் செய்தியாளர் என்ற பாகுபாடுகள் கிடையாது)
* சட்டத் தெளிவு வேண்டும், இவ்வாறு செய்தியாளர் பல தகுதிகளையும் பண்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.
*அது சரி பத்திரிகை தர்மம் எனறு சொல்லிவிட்டு(…) இப்படி அடைப்பு பொட்டியில் என்னய்யா பிற்றல்..?
* ஒன்றும் இல்லை ஸ்வாமி….! இந்த சமுதாய தூண்களில் ஒன்றான பத்திரிகைகளில்….! பல புல்லுருவிகளின் வேர், நான்காம் தூணை தகர்த்துக்கொண்டு இருக்கின்ற காரணத்தால்…! ஏற்பட்ட அவமான அடைப்பு வார்த்தைகள் தான் ஸ்வாமி அது…!
* அடப்… போய்..! நீயும் உன் பத்திரிகை தர்மமும்…! கலியுகத்தில் இப்படி தான் இருக்கும், படிச்சவன் பாட்டக் கெடுப்பான்…! எழுதியவன் ஏட்டக் கெடுப்பான்னு….! பாண்டவர்கள்கள் காலத்திலேயே சொலிட்டானுக அது தெரியுமா உனக்கு…?
* தெரியாது ஸ்வாமி….!
* அடப்பாவி சரி….! அந்த பஞ்சபாண்டவர்களின் அண்ணாச்சி தர்மராஜன்கிட்ட யாரோ சென்னது அதை அப்படியே சொல்றேன் கேட்டுக்கோ…!
 *மிஸ்டர்  பாண்டவா பிரதர்ஸ் {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் அறத்தையும், அறநெறிகளையும் ஏமாற்றுகரமாகப் பயில்வார்கள். பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் அறம் என்ற வலையைப்பின்னி தங்கள் சகாக்களை ஏமாற்றுவார்கள்.
கற்றலில் {கல்வியில்} பொய்ப்புகழ் கொண்ட மனிதர்கள், தங்கள் செயல்கள் மூலமாக உண்மையை {சத்தியத்தை} குறுக்கி மறைத்து வைக்க ஏற்பாடு செய்வார்கள். வாழ்நாள் குறைவதன் தொடர்ச்சியாக, அவர்களால் பெரிதாக ஞானத்தை அடைய இயலாது. புத்தி குறைவின் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஞானம் இருக்காது.
இதனால் பொருளாசையும் பேராசையும் அவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கும். பேராசை, கோபம், அறியாமை, காமம் ஆகியவை கொண்ட மனிதர்கள், ஒருவர் இன்னொருவரின் உயிரை எடுக்க விரும்பி ஒருவருக்கொருவர் பகைமை பாரட்டுவார்கள். அறங்கள் குறுகி, தவத்தையும், உண்மையையும் கைவிடும் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களுக்குச் சமானமாகக் குறைக்கப்படுவார்கள்.
தாழ்ந்த வகை மனிதர்கள் அனைவரும், இடைநிலை மனிதர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இடைநிலை மனிதர்கள் அனைவரும் நிச்சயமாகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, யுகத்தின் முடிவில் உலகத்தில் நிலை இவ்வாறே இருக்கும்…..! அப்படிக்க சொல்லிட்டாங்களே, மைடியர் பத்திரிகை தர்மம்…..!
கலி காலத்தில் இப்படி தான்…..!
** ஓ மைலாடிகளே…..!
Advertisement
SHARE