இன்போசிஸ் டூ இயற்கை வேளாண்மை…கர்வத்தோடு ஸ்கந்தன்

இயற்கை வேளாண்மை

39
1861
Advertisement
Advertisement

கேரளா மாநிலத்தில் பிறந்த பொறியியல் பட்டாதாரி இவர். பல நிறுவனங்களில் பணி புரிந்து இறுதியாய் இன்போசிஸ். இந்த கணிணி நிறுவனத்தில் தலைமைக்கு அடுத்த நிலை அதிகாரி.

அளவில்லா பணம்,ஆடம்பர வாழ்வு என இருந்தவர் இதயத்தில் எண்ணற்ற கேள்விகள்.
தேடலில் சென்றவர் நின்ற இடம் இயற்கை வேளாண்மை.

கா்நாடக ௯ர்க் மாவட்டத்தில் இயற்கை எழில் ௲ழ்ந்த மலை அடிவாரத்தில் ஐம்பது ஏக்கர் இடத்தை பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கினார்.

வாகனம் செல்ல வசப்படா வனாந்திரம். ௯ட்டாய் வந்த நண்பர் முயற்சித்தாலும் முடியாது என பாதியில் ௯றினார்.

இயற்கை வேளாண்மை

வெற்றி இலக்கை எட்டுவது மட்டுமே எனது வேலை என இன்றுவரை போராடும் இரும்பு மனிதர்.

இயற்கை வேளாண்மையில் மிளகு,காபி என பயிரிட தொடங்கினார்.இயற்கை ௲ழ் இடத்தில் மரத்தால் ஆன மாளிகை கட்டினார்.

இடத்திற்கு அருகில் இயற்கை கொடுத்த வரமாய் நீண்ட நீரோடை.


கலப்படமில்லா காற்றை விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் மனித இனம்.

இங்கே சுற்றுலா வருபவர்களை ஈர்க்க விரும்பினார். குழந்தைகள் விளையாடி மகிழ,மலை ஏற என பல ஏற்பாடுகளை ஏற்படுத்தி உள்ளார்.

இயற்கை வேளாண்மை செய்யும் இவர், இயற்கையோடு இணைந்து வாழ அமைதியான இடத்தை அமைத்துள்ளார்.

சுவையான இயற்கை உணவோடு இதயத்தால் வரவேற்கும் இவரை வாழ்த்தி விடை பெற்றோம்.

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119