அம்மா உணவகம் திட்டத்தை பின்பற்றும் கர்நாடக அரசு..!

38
594
அம்மா உணவகம் திட்டத்தை பின்பற்றும் கர்நாடக அரசு..!
Advertisement

அம்மா உணவகம் திட்டத்தை பின்பற்றும் கர்நாடக அரசு..!

Advertisement

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை கேன்டீன்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன. அம்மா உணவகம் திட்டத்தை பின்பற்றும் கர்நாடக அரசு..!

இந்திரா கேன்டீன்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகங்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திறந்து வைத்தார்.

பின்னர் பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல், இது காங்கிரஸ் அரசின் திட்டம்.

இத்திட்டம் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் செயல் வடிவம் பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது.

இத்திட்டத்தின்படி காலை உணவு ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மதியம் மற்றும் இரவு உணவுகள் ரூ.10 க்கு கிடைக்கும்.

முதல் கட்டமாக பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மக்களின் அபிமானத்தை பெறுவதற்காக சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த மலிவு விலை உணவகங்களை துவங்கி உள்ளது.

தேங்கிக் கிடக்கும் குப்பைகள், சரிந்து வரும் வேலைவாய்ப்புக்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால்,

ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை மாற்றவே இந்த மலிவு விலை கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகள்: கவின்