குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை…!

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை...!
Advertisement
Advertisement

சென்னை இந்தி பிரசார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்.

தமிழ்நாட்டுக்கு இன்று வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இருநாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு வருகை தரவுள்ளார்.

அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று ராம்நாத் கோவிந்த பங்கேற்கிறார். அப்போது, மகாத்மா காந்தி சிலையை அவர் திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த்,

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.