பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..!

பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..!
Advertisement
Advertisement

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் விமானங்கள் பலத்தை பார்த்து, மிரண்ட பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகையை சேர்ந்த 12 போர் விமானங்கள், எல்லை தாண்டி சென்று ,

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த நடவடிக்கையை மேற்கு பிராந்திய விமானப்படை ஒருங்கிணைத்தது.

இந்திய விமானங்களை பார்த்ததும், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப்16 போர் விமானங்களும், பதிலடி கொடுக்க முயற்சித்தன.

ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்து மிரண்ட, பாகிஸ்தான் விமானங்கள் உடனடியாக திரும்பி சென்றன.

இதனிடையே, பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா நகரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டன.