கால்லே டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்தியா..!

37
846
கால்லே டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்தியா..!
Advertisement

கால்லே டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் இந்தியா..!

Advertisement

கால்லே டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்தியா தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் 498 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றுள்ளது இந்திய அணி.

3-ம் நாள் ஆட்ட முடிவில் விராட் கோலி 114 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

கடைசி பந்தில் தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 116 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் குணதிலக பந்தில் எல்.பி.ஆனார்.

ஷிகர் தவண் 14 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பரிகொடுத்தார்.

புஜாரா 15 ரன்கள் எடுத்த நிலையில் லெக் கல்லியில் இதற்காகவென்றே நிறுத்தப்பட்டிருந்த மெண்டிஸிடம் பிளிக் ஷாட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 நிறுத்தி வைத்து வீழ்த்திய பவுலர் குமாரா. 56/2 என்ற நிலையில் முகுந்த், கோலி ஜோடி இணைந்து ஸ்கோரை 189 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

முன்னதாக இலங்கை அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது,

திலுருவன் பெரேரா 132 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

309 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றும் நடப்பு கிரிக்கெட் உலக ஃபேஷனுக்கு இணங்க பாலோ ஆன் அளிக்கப்படவில்லை.

இலங்கை அணிக்கு இருக்கும் சங்கடங்கள் பற்றாது என்று கேப்டன் ரங்கனா ஹெராத், விராட் கோலியின் சக்திவாய்ந்த டிரைவை தடுக்க முயன்று காயம் பட்டு வெளியேறினார்.

இதனால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

செய்திகள்: கவின்