நியூஸிலாந்தை திணற வைத்த இந்திய பவுலர்கள்..!

0
109
நியூஸிலாந்தை திணற வைத்த இந்திய பவுலர்கள்..!
Advertisement
Advertisement

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாத நியூசிலாந்து அணி 157 ரன்னுக்கு சுருண்டது.

குல்தீப் 4, முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் நடக்கிறது.

‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் அம்பதி ராயுடு மீண்டும் இடம் பெற்றார்.

புவனேஷ்வர் குமார், முகமது ஷமி என இரண்டு ‘வேகங்கள்’, சகால், குல்தீப் என இரண்டு ‘சுழல்’ வீரர்களுடன் ‘ஆல் ரவுண்டராக’ தமிழகத்தின் விஜய் ஷங்கர் இடம் பெற்றார்.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், முன்ரோ ஜோடி துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய போட்டியின் 2வது ஓவரில் கப்டில் (5) போல்டானார்.

தொடர்ந்து அசத்திய ஷமி, அடுத்து மன்ரோவையும் (8) போல்டாக்கினார்.

காலின் முன்ரோவின் விக்கெட் ஒருநாள் போட்டியில் ஷமியின் 100-வது விக்கெட்டாக அமைந்தது. 56-வது போட்டியிலே இந்த சாதனை ஷமி எட்டியுள்ளார்

சகால் சுழலில் ராஸ் டெய்லர் (24), டாம் லதாம் (11) இருவரும் அவரிடமே ‘பிடி’ கொடுத்து திரும்பினர்.

கேதர் ஜாதவிடம் நிகோல்ஸ் (13) சிக்கினார், மீண்டும் மிரட்டிய ஷமி, இம்முறை சான்ட்னரை (14) வெளியேற்றினார்.

வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிரேஸ்வெல் (7), பெர்குசன் இருவரும் குல்தீப் ‘சுழலில்’ சரிந்தனர்.

நியூசிலாந்து அணி 38 ஓவரில் 157 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் குல்தீப் 4, முகமது ஷமி 3, சகால் 2, கேதர் ஜாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர்.