தோனி, கோலியை பின்னுக்கு தள்ளிய மிதாலி ராஜ்…!

தோனி, கோலியை பின்னுக்கு தள்ளிய மிதாலி ராஜ்...!
Advertisement
Advertisement

இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில்,

வெற்றிகரமான சேஸிங் செய்த போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ளவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சமீப காலமாக மகளிர் கிரிக்கெட் பல மடங்கு உயர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கிரிக்கெட் வீராங்கனைகளின் சாதனைகள், மகளிர் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருக்கும் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ்,

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து ஆடிய இந்திய அணியில் துவக்க வீராங்கனை ரோட்ரீகஸ் 0, தீப்தி ஷர்மா 8 ரன்களில் வெளியேறினர்.

மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இந்த போட்டியில் 111 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார் மிதாலி ராஜ். ஸ்மிருதி அதிரடியாக ஆடி 83 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார்.

மிதாலி ராஜ், டெஸ்ட் போட்டி போல பொறுமையாக ஆடியது விமர்சனத்துக்கு உள்ளானது. எனினும், மிதாலி ராஜ் பொறுப்பாக நின்று ஆடியதால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.

அவரும் ஆடவர் கிரிக்கெட்டையும் மிஞ்சும் சாதனை ஒன்றை செய்து அசத்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் பொறுமையாக ரன்கள் குவித்தாலும், வெற்றிகரமான சேஸிங்களில் கடைசிவரை நின்று அணியை காப்பாற்றுவது இவர்கள் தான் என்பது இவர்களது சராசரியை வைத்தே சொல்லலாம்.

வெற்றிகரமான சேஸிங்களில் தோனி 103.07 சராசரியும், மிதாலி ராஜ் 111.29 சராசரியும் வைத்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இருக்கின்றனர்.

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை சேர்த்துப் பார்த்தால் மிதாலி ராஜ் (111.29) முதல் இடத்திலும், தோனி (103.07) இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.

இந்த பட்டியலில் கோலி 96.23 சராசரியுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.