நியூசிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு.. பிசிசிஐ அறிவிப்பு..!

நியூசிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு.. பிசிசிஐ அறிவிப்பு..!
Advertisement
Advertisement

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்து வரும் ஒருநாள் தொடரில் கோலி கடைசி இரு போட்டிகளில் ஆட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

அதே போல டி20 தொடரிலும் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

கடந்த சில மாதங்களாக கோலி தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவதால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடினார். தொடர்ந்து நியூசிலாந்து தொடரில் பங்கேற்று வருகிறார்.

முதல் போட்டியில் வெல்லும் வரை கோலி இந்த தொடர் முழுவதும் ஆடுவதாகவே இருந்த நிலையில்,

முதல் போட்டிக்கு பின்னர் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ செய்தி மூலம் தெரிய வந்துள்ளது.

கோலி ஓய்வு பெரும் நிலையில் கடைசி இரு ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

ஆசிய கோப்பை தொடரில் கோலி, ஓய்வு பெற்ற போது கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

கோலி ஓய்வு பெற்றால் பேட்டிங்கில் இந்தியா அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரையும் ஆட வைக்க அதிக வாய்ப்புள்ளது.

இளம் வீரர் ஷுப்மன் கில்-லும் ஒருநாள் போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.