ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக தோனி 10,000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகள் மோதும் முதல் போட்டி சிட்னியில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் தவான் (0), கோஹ்லி (3), அம்பதி ராயுடு (0) விரைவில் திரும்பினர்.
பின் வந்த தோனி 1 ரன் எடுத்த போது, இந்திய அணிக்காக ஒருநாள் அரங்கில் 10,000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார். இந்த மைல்கல்லை எட்டிய 5வது இந்தியர் ஆனார்.
மொத்தம் 330 போட்டிகளில் இந்த ரன்கள் எடுத்தார். முதலில் களமிறங்கிய போது 5554 ரன்களும், ‘சேஸ்’ செய்த போது 4446 ரன்களும் எடுத்துள்ளார்.
* சர்வதேச அரங்கில் 10,000 ரன்கள் எடுத்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது.
* தவிர ஆசிய லெவன் அணிக்காக விளையாடிய 3 போட்டிகளில் 174 ரன்கள் எடுத்துள்ளார்.
* ஒட்டுமொத்த அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 13வது வீரர் ஆனார் தோனி.