அரசியல் சதுரங்கத்தில்……! சாப்ட்வேர் தமிழனின் சங்கடம்..

தகவல் தொழில்நுட்பத்தை

0
6684
Advertisement
Advertisement

நமது நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் விருப்பம் அனேகமாக அதிக விவசாய பொருட்களை உற்பத்தி செய்வது தான் மேலும் அதற்க்கான உரிய விலை மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கஷ்டத்தை எளிமைபடுத வேண்டும் என்பதே, அது போக  வறட்சி, புயல் போன்ற இயற்கைச் சோதனைகளின் போது அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும்  என்பதே ஆகும்.

இவை விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் அரசு ஏற்படுத்திக்கொடுப்பது மட்டும்தான் ஒட்டுமொத்த…  நிரந்தரத் தீர்வாக அமையும். அப்போதுதான் விவசாயிகளின் வறுமை இதன் காரணமான தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத் தரமின்மை போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நமது நாட்டில் தொடராது என்றார் திருசெல்வம்.

விவசாயிகளின் ஒட்டுமொத்த.. பிரச்சனைகளை இப்படி பகுத்து நுட்பமாக பார்க்கும் திருசெல்வம் ஒன்றும் விவசாயி அல்ல….! இவர் ஒரு சாப்ட்வேர் எஞ்ஜினியரிங் முடித்து கைநிறை சம்பாதித்து வந்தவர்.

அரசியல் சதுரங்க விளையாட்டில் இந்த சாப்ட்வேர் எஞ்சினியர் தனது 16 வருட உழைப்பை தாய் நாட்டின் விவசாய விழிப்புணர்வு நலனுக்காக தியாகம் செய்தவர்.

16 ஆண்டுகளில் மாறி…மாறி வந்த மாநில, மத்திய அரசுகள்.. இவரின் விவசாய விழிப்புணர்வு திட்டத்தை திரும்ப கூட பார்க்காமல் இருப்பது தான் இவரின் திட்டத்தின் சிறப்பு..!?!

காரைக்குடி… ஆலம்பட்டு கல்யாணி ராமு தம்பதிகளின் தவபுதல்வன் கணினித்துறையில் கைநிறை சம்பாதிக்க வேண்டியவர் தற்போது, தாய் நாட்டுக்காக தனயனை தாரை வார்த்த பெற்ற தாய் கல்யாணியம்மையின் உடல் நலத்துக்காக,  மதுரை மீனாட்சி மருத்துவமனையில் உருக்குலைத்து இருக்கிறார் திருசெல்வம்.

அந்த இருக்கமன நேரத்தில்கூட தனது தாயின் விவசாய விழிப்புணர்வு கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையில் தனது டிஜிட்டல் விவசாய ஒருங்கிணைப்பு திட்டத்தை நம்மிடையே பகிர்ந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் முக்கியமன சில  துறைகளுக்குச் செய்யப்படும் செலவுகளுக்கு  வரவு… செலவு கணக்கு… எதிர்பார்க்கத் தேவையில்லை என்கிற பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில தான் செயல்படுகிறது, அப்படிப்பட்ட துறைகளில், எல்லைப் பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்றவை அதன் வரிசையில் நாட்டின் உணவுப் பாதுகாப்பும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. அப்படியென்றால், விவசாயக் கடனுக்கு வட்டி என்கிற வார்த்தையே தவறானதாகிறது. விவசாயம் பொய்த்துப்போகும்போதோ, விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டமடையும்போதோ விவசாயக் கடனை வசூலிப்பதும்கூடத் தவறானதாகவே ஆகும்.

விவசாயத்தைவியாபாரமாக பார்க்கப்படக்கூடாது. விவசாயி கணக்கு பார்த்தால் உள்ளாடை கூட மிஞ்சாது.

  இன்றைய சந்தை நிலவரங்களை இடைத்தரகர்கள் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு விவசாயி தெரிந்துகொள்வதில்லை.

இதனால், இடைத்தரகர் எவ்வளவு விலை குறைவாகக் கேட்டாலும் விவசாயி நம்ப வேண்டியிருக்கிறது. தான் பயிரிட்ட விளைபொருள் தற்போது எத்தனை ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது; இன்னும் எத்தனை ஏக்கரில் அறுவடை செய்யப்பட வேண்டியுள்ளது என்பதை ஒரு விவசாயி அறியும் வாய்ப்பு உருவாக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் சிறப்டையும்.
மாறாக….தொழில் நேர்த்தி, திட்டமிடல் இல்லாமல் இருப்பதால் விவசாயம் லாபமற்ற தொழிலாக இருக்கிறது.

இதற்கான தீர்வு தகவல் தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்துவதுதான்.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் இணைய வசதியுடன் கணனி, இரு பணியாளர்களைக் கொண்ட மையம் தேவை. இதற்காகத் தனியாக இடம் தேடத் தேவையில்லை. பஞ்சாயத்து அலுவலகம், சமூகக் கூடங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதல்கட்டமாக அந்த கிராமத்தில் எத்தனை விவசாய நிலங்கள் உள்ளன? ஒவ்வொரு நிலத்தின் நீர் வளம் எவ்வளவு? மண் தன்மை என்ன? ஆகியவற்றைக் கணினியில் பதிவுசெய்ய வேண்டும். அடுத்ததாக இந்த நிலங்களில், இன்னென்ன பருவங்களில் அதிகபட்ச விளைச்சலைத் தரும் பயிர்கள் எவை என்பதை மூத்த விவசாயிகள், விவசாய ஆராய்ச்சியாளர்கள், துறை சார் நிபுணர்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்களிடம் இந்த மையம் மூலம் ஆலோசனை பெற்றுப் பயிர் செய்யலாம். இதற்காக சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம், என்பதை அடிப்படையாக கொண்டு… தகவல் தொழில்நுட்பத்தின்  அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தித் தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல்  மற்றும் விவசாயம் செய்வதில்  உள்ள  கடின  தன்மையை எளிமையாக்கி,   ஒரு புது  இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்று உள்ளம்.

இதன் காரணமாகவே கிராம அளவில் செயல்படும் விவசாய  மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகள் நல்ல  பலன் பெற முடியும்.

இந்தத் தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம்.
என்றார் ஆர்வத்துடன்  திருசெல்வம்.

நமது அரசியல்வாதிகளின் ஆட்சியமைப்பு மீதுஇவருக்கு இருக்கும் தன்னம்பிக்கைக்கு நமது வாழ்த்துக்கள்…!!!

இவரின் “விவசாய விழிப்புணர்வு விரிவாக்க தொலை தொடர்பு திட்டம்” மற்றும் “விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரச்சனைகளின் தீர்வு” திட்டங்கள்  பற்றி நாம் விசாரித்த வரை 30-க்கும் மேற்பட்ட IAS. அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது…! மேலும் திருசெல்வத்தின்..”ஒட்டுமொத்த விவசாய பிரச்சனைகளின் நிரந்தர தீர்வு” திட்டம் தான் தற்போதைய விவசாய சூழ்நிலையில் மிகச்சிறந்த நிவாரணம். என்று பரிந்துரையும் செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் வந்து இருக்க வேண்டிய.. திருசெல்வத்தின் “டிஜிட்டல் விவசாயத் திட்டம்”…..!?! வழக்கமான நமது நாட்டின் சாபக்கேடான சில அரசியல் இடைத்தரகர்கள்…  மற்றும் அரசியல் வியாபாரிகளிடையே, பெரும் வர்த்தக பேரத்தில்…. நசுக்கப்பட்டதென்று நமது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாய் நாட்டை காக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடும், நமது டிஜிட்டல் பிரதமரின் கவனத்துக்கு…… ஏன் இந்த “ஒட்டுமொத்தமான நிரந்திர தீர்வு திட்டம்”….!  தெரியாமல் போனது.

இதில் உள்ள அரசியல் உள்குத்து களையப்பட வேண்டும்.

சாதனையாளர்கள் எல்லோரும் வேதனையில் நொந்து… சோதனையில் நீந்தி வரவேண்டும் இது தான் வெற்றியாளர்களின் எழுதப்படாத விதி.

நேர்மையின் பயணம் மெதுவானது… அது வெற்றி எனும் சத்தியத்தின் உறுதியானது…!

அரசியல் சதுரங்க நாடகத்தில் நாட்டின் நலப்பணி நாசமாகி விடக்கூடாது.

சாப்ட்வேர் தமிழ்னின் பசுமை கனவு…. வெற்றியடைய வாழ்த்தும் நமது “தமிழ் செய்தி” என்றும் துணை நிற்கும்….

சங்கரமூர்த்தி, 7373141119