நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ…!

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ...!
Advertisement
Advertisement

கொடைக்கான‌ல் ப‌ழ‌னி பிரதான‌ ம‌லைச்சாலையில் உள்ள‌ கூம்பூர்வ‌ய‌ல் ம‌ற்றும் பில்லூர் எஸ்டேட் உள்ளிட்ட‌ த‌னியார் வருவாய் நிலங்களில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீயால் தோட்ட‌ப் ப‌குதிக‌ளில் உள்ள‌ வாழை, அவ‌கோடோ, ஆர‌ஞ்சு, பலாஉள்ளிட்ட‌ ம‌ர‌ங்க‌ள் தீயினால் க‌ருகி சேத‌மடைந்தது.

மேலும் தொட‌ர்ந்து காட்டுத்தீ வேகமாக ப‌ர‌வி இந்த பகுதிகளில் உள்ள மின்க‌ம்பிக‌ள், மின்மாற்றிக‌ள் செல்லும் வ‌ழித்த‌ட‌த்திலும் எரிந்து,

அருகில் உள்ள‌ கிராம‌ங்க‌ளுக்கு மின் இணைப்பு த‌டைப‌டும் அபாய‌மும் அருகே உள்ள‌ வ‌ன‌ப்ப‌குதிக‌ளிலும் தீ ப‌ர‌வும் சூழலும் ஏற்ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ப்ப‌குதி விவ‌சாயிக‌ள் தீயை அணைக்கும் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.