அமைச்சர் கே.சி.வீரமணியின் அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை..!

அமைச்சர் கே.சி.வீரமணியின் அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை..!
Advertisement
Advertisement

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான மண்டபத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கே.சி.வீரமணியின் அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை..!

திருப்பத்தூர் அருகே இடையம்பட்டியில் அமைச்சரின் அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் வேலூரில் மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபலமான தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருமலா பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை, வேலூர், காட்பாடி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

தொழிலதிபர்கள் ராம ஆஞ்சநேயலு, ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், பிரேமானந்தனுக்கு  சொந்தமான நிறுவனங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.