சி.ஏ. படிக்க ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்…!

சி.ஏ. படிக்க ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்…!
Advertisement
Advertisement

இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் நிறுவனத்தில் சி.ஏ. படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது இன்று முதல் ஆரம்பமாகிறது.

இந்தியாவில் சார்ட்டட் அக்கவுன்டன்ட் படிப்புக்கு தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் ஒன்றாக இருப்பது இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் நிறுவனம்.

இதில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.

மே மாதம் நடைபெறும் தேர்வை எழுத விரும்புபவர்கள் icaiexam.icai.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

காலை 10 மணி முதல் விண்ணப்பப் பதிவு ஆரம்பித்திருக்கிறது.

தாமதக் கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 12, 2019. தாமதக் கட்டணத்தையும் சேர்ந்து விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 19, 2019.

தேர்வு தேதிகள் பின்வருமாறு,

புதிய திட்டத்தின் அடிப்படையில், அடிப்படை தேர்வு (Foundation Course Examination, Under New Scheme)
10, 12, 14, மற்றும் 16 மே, 2019

பழைய திட்டத்தின் அடிப்டையில், இடைநிலை தேர்வு (Intermediate Course Examination, Under Old Scheme)
குரூப் 1 – 3, 5, 7 மற்றும் 9 மே, 2019
குரூப் 2 – 11, 13, மற்றும் 15 மே, 2019

புதிய திட்டத்தின் அடிப்டையில், இடைநிலை தேர்வு (Intermediate Course Examination, Under New Scheme)
குரூப் 1 – 3, 5, 7 மற்றும் 9 மே, 2019
குரூப் 2 – 11, 13, 15 மற்றும் 17 மே, 2019

புதிய திட்டத்தின் அடிப்டையில், கடைசி தேர்வு (Final Course Examination, Under new scheme)
குரூப் 1 – 2, 4, 6 மற்றும் 8 மே, 2019
குரூப் 2 – 10, 12, 14 மற்றும் 16 மே, 2019

சர்வதேச வரி விதிப்பு – மதிப்பீட்டுத் தேர்வு (International Taxation – Assessment Test)
10 மற்றும் 12 மே, 2019