இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன்…!

இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன்...!
Advertisement
Advertisement

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது.இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன்…!

விமானி அபிநந்தனை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். மேலும் இந்தியாவுக்கு அழைத்து வர குடியுரிமை ஆவணங்கள் தயார் செய்யப்படுகின்றன.

எல்லையிலிருந்து அமிர்தசரஸ் அழைத்து செல்லப்படும் அபிநந்தன், பின்னர் விமானம் மூலம் டில்லி அழைத்து செல்லப்பட உள்ளார்.

அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொது மக்கள் வாகா அட்டாரி எல்லையில் கூடினர். தேசிய கொடியுடன் மேளதாளம் முழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.