தேமுதிக குறித்து பேச விருப்பமில்லை: ஸ்டாலின்

தேமுதிக குறித்து பேச விருப்பமில்லை: ஸ்டாலின்..!
Advertisement
Advertisement

தேமுதிக விவகாரம் குறித்து பேச விருப்பமில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
திமுகவுக்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அக்கட்சி தலைவர்கள் என்னை சந்தித்து தேர்தல் பணியை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் இன்னும் குழு அமைக்கவில்லை. இரவுக்குள் அமைக்கப்படும்.
தொடர்ந்து நாளை காலை அவர்கள் வந்து திமுக நிர்வாகிகளை சந்திப்பார்கள். படிப்படியாக மற்ற கட்சிகளுடன் பேசி இரண்டொரு நாளில் தொகுதிகள் அறிவிப்பு வெளியிடப்படும்.
தேமுதிக விவகாரம் குறித்து பொருளாளர் துரைமுருகன் விளக்கம் கொடுத்துவிட்டார். இதனால், அந்த விவகாரம் குறித்து பேசி நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை.
மீண்டும் தேமுதிகவினர் யாரும் வந்து துரைமுருகனிடம் பேசிவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியினர், துரைமுருகன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கலாம்.

நீங்களும் கேள்வி கேட்க வேண்டாம். எனது தேர்தல் பிரசாரத்தை விருதுநகரிலும், ஊராட்சி சபை கூட்டங்களிலும் ஆரம்பித்துவிட்டேன். திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் இணைந்து நடத்த வேண்டும். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்கின்றன.
இதனை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.