பல்வலி…! நமது ஆரோக்கியம் நம் கையில்…! (2)

பல்வலி...! நமது ஆரோக்கியம் நம் கையில்...! (2)
Advertisement
Advertisement

நமது உடலில் உள்ள உறுப்புகளில் ரகசியங்கள் ஏராளமாக உள்ளன.

அவைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் அறிந்து கொள்வது அவசியம்…

அது பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள தவறியதால் தான், நமது ஆரோக்கியம் நம்மை ஏமாற்றி விடுகிறது…! எனவே தான் இந்த தொடர்…,

சாதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும், கடுகு, மிளகு,  பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகைகள், வலி நிவாரணிகள் உள்ளன.

உதாரணமாக பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.

கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி.

கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.

சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம்.

துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதாரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.

திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும்.

இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்.நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும்.

அதிகமாக காய்,கனிகள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட்டால் “நமது ஆரோக்கியம் நமது கையில்…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119