கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்…!

கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்...!
Advertisement
Advertisement

குடி குடியை கெடுக்கும் முன் குடிப்பழக்கம் கல்லீரலை கெடுக்கும்…!

கல்லீரல் நமது உடலில் மூன்று முக்கிய செயல்களை செய்து வருகிறது.

அழுக்குகளை நீக்குவது, பித்த நீரை உற்பத்தி செய்வது, சத்துக்களை சேகரிப்பது போன்றவற்றை செய்கின்றது.

இத்தகைய முக்கிய வேளையை செய்து கொண்டிருக்கும் கல்லீரலில் கொழுப்புகள் சேர்த்து அடைப்புகள் ஏற்பட்டால் உடலின் மொத்த செயல்பாடும் நின்று விடும்.

வடிகட்டிய அரிசி நீர்

பலருக்கு இந்த வைத்திய முறை சற்றே ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இது அதிக பயனை தர கூடியது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதாவது, அரிசியை வேக வைத்து, அதனை வடிகட்டிய பின்னர் மீதம் இருக்கும் நீரை நீங்கள் குடித்தால்,

கொழுப்புக்களை அகற்றி கல்லீரலின் செயல்பாட்டை வேகமாக வைத்து கொள்ளுமாம்.

கற்றாழை

பலருக்கு கற்றாழையின் மகத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெறும் தலை முடிக்கு மட்டும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், முக்கிய உறுப்பான கல்லீரலை காப்பதற்கு கற்றாழை சாற்றை தொடர்ந்து எடுத்து கொண்டாலே போதும். இது அருமையான பலனை தர கூடியதாகும்.

பப்பாளி
கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை நீக்குவதற்கு ஒரு அருமையான வைத்தியம் இந்த பப்பாளி தான்.

பப்பாளி மற்றும் இதன் விதைகள் கல்லீரல் கொழுப்பை சீக்கிரமாகவே வெளியேற்றி விடுமாம்.

இதனை ஒரு சில முறையுடன் சாப்பிட்டால் பலன் அதிகம் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பப்பாளியை துண்டு துண்டாக அரிந்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் அருமையான பலனை அடைய முடியும்.

மேலும், இவை கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு சிறந்த முறையாக உள்ளது.

அடுத்து, பப்பாளியின் விதைகளை அரைத்து நீருடன் கலந்து தினமும் குடித்து வரலாம்.

மோர்
நம்மில் பலருக்கு தினமும் பால் குடிக்கும் பழக்கமே அதிகம் இருக்கும்.

ஆனால், பாலில் இருந்து தயாரிக்கபடுகின்ற இந்த மோரை தினமும் குடித்து வந்தால் கல்லீரலுக்கு வர கூடிய ஆபத்தை எளிதாக தடுத்து விடலாம்.

அத்துடன் நாள் முழுக்க அதிக சுறுசுறுப்புடனும் இது இருக்க செய்கிறது.

மஞ்சள்
மகத்துவங்கள் நிறைந்த மஞ்சளை நாம் உணவில் போதுமான அளவு சேர்த்து கொண்டாலே எல்லா வித நோய்களில் இருந்தும் தப்பி விடலாம்.

கல்லீரலில் கொழுப்புக்களை கரைக்க 1 கிளாஸ் நீரில் 1/4 ஸ்பூன் மஞ்சளை போட்டு தொடர்ந்து குடித்து வரலாம்.

அல்லது, பாலில் மஞ்சளை கலந்தும் குடித்து வரலாம். இந்த முறை அருமையாக வேலை செய்யும்

நெல்லி கனி
பல மருத்துவ பயன்களை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் இந்த நெல்லி கனி கல்லீரலில் உள்ள கொழுப்புகளை எளிதில் நீக்க கூடியது.

நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்கனி ஒன்றை தினமும் எடுத்து கொண்டால் கொழுப்புகள் நீங்கி விடும்.

இவை உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் தீர்வை தருகிறது.

பலருக்கு கல்லீரல் பாதிப்படைய முதன்மையான காரணமாக இருப்பது குடி பழக்கம் தான்.

அத்துடன் அடிக்கடி சாப்பிடும் கொழுப்பு உணவுகள் தான். இவை தான் கல்லீரலில் முக பெரிய எமனாக இருக்கிறது.

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119