ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு…!

ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு...!
Advertisement
Advertisement

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வீச்சு மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எம்.பி,க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதையடுத்து  அவரது எம்.எல்.ஏ பதவியும், அமைச்சர் பதவியும் பறிபோனது.

இந்நிலையில் தனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆனால் தண்டனையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் ஓசூர் தொகுதி காலியாக இருப்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிகள் என,

20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது ஓசூர் தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.