உயர்கல்வி செயலாளரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..!

0
102
உயர்கல்வி செயலாளரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..!
Advertisement
Advertisement

உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து,உயர்கல்வி செயலாளரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..!

நாளை மறுநாள் கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பாரதியார் பல்கலை.,யில் தொலைத்தூர கல்வி மையங்களை வெளி மாநிலங்களில் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வாறு மையங்களை திறக்கக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதற்கு மாறாக, வெளிமாநிலங்களில் தொலைதூர கல்வி மையங்கள் திறக்கப்பட்டன.

இதனையடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் மங்கத்ராம் தவிர மற்ற 8 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர்.

மங்கத்ராம் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.