தமிழக அரசிற்கு ஐகோர்ட் எச்சரிக்கை…!

தமிழக அரசிற்கு ஐகோர்ட் எச்சரிக்கை...!
Advertisement
Advertisement

சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு கையாளும் நிலையை பார்த்தால், நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐகோர்ட் உத்தரவுப்படி,சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

தனக்கு அலுவலகம் ஏதும் இல்லாமல் இருப்பதாக பொன்.மாணிக்கவேல் ஐகோர்ட்டில் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்.மாணிக்கவேல் தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் வேண்டாம் எனக்கூறியதாக தெரிவித்தார்.

அப்போது, டிஜிபியின் உதவியாளர் ஒருவர் கேட்டதால் தான் சாவியை ஒப்படைத்ததாக விளக்கம் அளித்தார்.

இதன் பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு கையாளும் நிலையை பார்த்தால்,

நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும். இதற்கான சூழ்நிலையை அரசு ஏற்படுத்த வேண்டாம்.

பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகியும் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை எனக்கூறினர்.