பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்..!

பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்..!
Advertisement
Advertisement

உத்தரபிரதேச மாநில அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக ‘கவ் சேவா ஆயோக்’ என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்..!

இது தனி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பசுக்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.

இந்த அமைப்பு செயல்பட ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதன் பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.

பசுவை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹேமமாலினி ஈடுபடுவார்.

இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஹேமமாலினி பசுபாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.