காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…!

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு...!
Advertisement
Advertisement

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம்  கொண்டாடப்படுகிறது.காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…!

இந்நிலையில் சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் காதலர் தினத்தை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் கோவை நகரில் காதலர்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் காதலர் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறி,

காதலர்கள் கூடும் இடங்களில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் ரேஸ்கோர்ஸ், வஉசி பூங்கா, பொட்டானிக்கல் கார்டன் மற்றும்

அனுவாவி சுப்ரமணியர் கோயில் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட கூடாது என இந்து அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.