நேத்திரம் பூண்டு…!நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து….!

0
400
நேத்திரம் பூண்டு...!நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து....!
Advertisement
Advertisement

சிறியோர் முதல் பெரியோர் வரை , அனைவரும் பாதிக்கப்படும், கண் நோய் பிரச்னைகள் பலப்பல!,

கண் மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, கண் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல், கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள், போன்ற நோய்கள் ஏராளம்.

  இத்தகைய குறைபாடுகளைக் களைய , அன்றே , நம் ஆதி சித்தர்கள் ஏடுகளில் எழுதி வைத்திருக்கும் அரிய சித்த வைத்திய முறைதான்,

அனைத்து கண் நோய்களுக்கும் மூலிகைகள் மூலம் சிறந்த தீர்வு காணும், நேத்திரப்பூண்டு கண் தைலம்.

  மிகவும் அரிதான ஒரு மூலிகை வகை தான், நேத்திரப்பூண்டு.

இந்த மூலிகையை , சாப நிவர்த்தி செய்து , பறித்து வந்து, சுத்தம் செய்து அத்துடன்,  நாட்டுச்செக்கில் ஆட்டிய தூய நல்லெண்ணெய் கலந்து,

ஒரு மண் பாண்டத்தில் இட்டு , அதன் வாயைத் துணியால் சுற்றி, வெயிலில் 10 முதல் 15 நாட்கள் வரை புடம் போட வேண்டும், 

       இடையில் அந்தக் கலவையை எடுத்து , நல்ல துணியில் வடிகட்டி, மீண்டும் வெயில் புடம் இட வேண்டும், இப்படி 6 முறை வடிகட்டிய பிறகு கிடைப்பது தான், நேத்திரப்பூண்டுக் கண் தைலம்.

     அனைத்து வகை கண் நோய்களுக்கும் , கண் மங்கலாகத்தெரிதல், கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, கண் நீர் வடிதல், கண் சிகப்பாய் இருத்தல், கண் குத்தல், கண் புருவம் இமைகளில் வரும் கட்டிகள் போன்ற வற்றைப்போக்கும் சிறந்த தீர்வு, 

   கண்களைக் குளுமைப்படுத்தும், கண் குறைபாடு களையும், அற்புத மூலிகைத்தைலம் தான் , நேத்திரப்பூண்டு கண் தைலம்.

       தினமும் , கண்களில், ஒன்று முதல் இரண்டு சொட்டு விட்டு வர, 15 – 20 நாட்களில் , கண் நோய் யாவும் ஓடி விடும். 

   தலையில் நீர் கோர்ப்பு, தலைவலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற சைனஸ் எனச் சொல்லப்படும், ஜலதோசத்தின் முற்றிய நிலை வியாதியை, முற்றிலும் நீக்கி விடும், இந்த நேத்திரப்பூண்டு கண் தைலம்!.

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119