31.2 C
Chennai, IN
Monday, May 27, 2019
Home special news பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு; கருப்பு கொடி காட்டிய வைகோ கைது..!

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு; கருப்பு கொடி காட்டிய வைகோ கைது..!

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு; கருப்பு கொடி காட்டிய வைகோ கைது..!
Advertisement
Advertisement

கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிரப்பு தெரிவித்து மதிமுக தலைவர் வைகோ தலைமையில் மதிமுகவினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களையும் வானில் பறக்கவிட்ட வைகோ மற்றும் அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார்.

மத்திய அரசின் சார்பில் முடிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும்

புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு நடக்கிறது.

விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக தலைவர் தலைவர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் மீது பாஜகவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

மதிமுக – பாஜக மோதல் காரணமாக காவல்கிணறு பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்யாமல் போலீசார் வேடிக்கை பார்ப்பதாக மதிமுகவினர் குற்றம் சாட்டினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ மற்றும் மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

%d bloggers like this: