ஸ்டெர்லைட் ஆலையை திறங்க… உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஹெச்.ராஜா வரவேற்பு…!

ஸ்டெர்லைட் ஆலையை திறங்க… உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஹெச்.ராஜா வரவேற்பு…!
Advertisement
Advertisement

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமரியாதையுடன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்றார்.

இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.