ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு..!

ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு..!
Advertisement
Advertisement

ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு..!

டில்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

இதில்குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான (composition scheme) ரூ.1.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

இது வரும் ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி சலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும்.

ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.