வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த்து ஜிசாட் 9 செயற்கைக்கோள்..!

40
562
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த்து ஜிசாட் 9 செயற்கைக்கோள்..!
Advertisement

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த்து ஜிசாட் 9 செயற்கைக்கோள்..!

Advertisement

ஜிஎஸ்எல்வி எப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த்து ஜிசாட் 9 செயற்கைக்கோள்..!

சார்க் நாடுகளுக்கு இந்தியாவின் பரிசு

சார்க் நாடுகளுக்காக வடிவமைபக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் இயற்கை பேரிடர் கண்காணிப்பு, தொலை தொடர்பு குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை சார்க் நாடுகள் மத்தியில் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே தயாரிப்பு

இன்று சரியாக 4.57 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

253 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளின் மொத்த செலவை இந்தியாவே ஏற்றுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டிலும் சொந்தமாக செயற்கைக்கோளை செலுத்தும் வசதி இல்லாத நிலையில் இந்தியா அந்த பொறுப்பை மேற்கொண்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

பிரதமர் வாழ்த்து

2014ம் ஆண்டு மங்கல்யான் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை கொண்டாடிய கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளுக்காக இஸ்ரோ சார்பில் ஒரு செயற்கைக்கோள் அனுப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள இந்த பணிக்கு, ராக்கெட் புறப்பட்ட 15வது நிமிடத்திலேயே பிரதமர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

செய்திகள்: சத்யா