பசுமை..புரட்சியில்.. பாண்டேஸ்வரம்..! சாதனை தம்பதிகள்.. ரேகா .. பார்த்தா..!

ரேகா
Advertisement
Advertisement

 

சென்னை ஆவடியை அடுத்துள்ள பாண்டேஸ்வரத்தில் சத்தம் இல்லாமல் இயற்கை வேளாண்மையில் பசுமை புரட்சி செய்து வரும் ரேகா பார்த்தசாரதி தம்பதிகள் இருவரும் பட்டதாரிகள்.

 பரபரப்பு மிகுந்த தலைநகர் சென்னையில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் நிதிதுறை அதிகாரி, கணவர் பார்த்தசாரதி மார்கெட்டிங் துறையில் கைநிறைய சம்பளம், அளவான குடும்பம், நிறைவான வாழ்கை,  என்று.

  பத்தோடு.. பத்தாக, பந்தாவாக வாழ்கையில் வலம் வரவேண்டிய பார்த்தசாரதி தம்பதியினர் எப்படி பசுமை எனும் பாதையில் தடம் பதித்தார்கள் என்ற கேள்விகளுடன் பார்த்தா.. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் பார்த்தசாரதியை சந்தித்தோம்

   ” ஐய்யா… நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் பதில்களை விட  என் மனைவியிடம் கேட்டு பாருங்கள் அதுதான் மிகவும் சரியாக இருக்கும்,  காரணம   மாற்றங்கள் பெண்களிடத்திலிருந்து வந்தால் தான் எதுவும் சிறப்பாக இருக்கும் ” என்று அவர் தனது மனைவி ரேகாவை அறிமுகம் செய்துவைத்தார்.

 நிற்பதற்கு கூட நேரம் இல்லாதவரன ரேகா…விடம் ஓடும் காரிலேயே ஓர் நேர்காணல்

  ” பசுமை எனும் இயற்கையிடம் கற்றுக்கொள்வதற்க்கே இந்த ஒரு ஜென்மம் போதாது, அப்படி இருக்க…
பசுமையில் புரட்சி எதுவும் செய்து விட முடியாது..!

  அன்று முதல் இன்று வரை எல்லோரும்,  பசுமையிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறோம்…! என்பது தான் உண்மை”..!

அதைதான் நாங்களும் செய்கிறோம்.. அவ்வளவு தான்..!

 இயற்கைக்கு எதிராக எவரும் வெற்றி கண்டதில்லை..! என்ற ரேகா மேலும் நம்மிடம் பேசியதாவாதாவது எங்கள்  இருவரின் குடும்பமும் பாரம்பரிய விவசாயக் குடும்பம்.. நாங்கள் அதையும் தாண்டி பர..பரப்பான நவநாகரீக வாழ்கை சூழலில் பயணப்பட்டோம்.
 
எங்களை இப்படி இயற்கையின் பக்கம் மாற்றத்தை ஏற்படுத்தியது போலி “ஆர்க்கானிக்” கடைகளே என்றால் மிகையாகாது…!!!!!

   இயற்கை விவசாய உற்பத்தி பொருட்கள் என்ற பெயரில் டப்பா மற்றும் பிளாஸ்டிக் பொட்டலங்களில் வரும் போலித்தனமான வற்றை வாங்கி வயிற்றை நிறைக்கும் அவலத்தில் இருந்து நாம் முதலில் மீளவேண்டும்…! எனும் ஒரு வெறிதான் எங்கள் இருவரையிம் இயற்கை விவசாயத்தின் பக்கம் திசை மாற்றம் செய்ய காரணியாக இருந்து..

இன்று எங்களை சுற்றி பல..பல..

விவசாயமக்கள் அதுவும் இளைஞர்கள் எழுச்சியிடன் கரம்கோர்த்து வருகிறா்கள்
 என்று முகம் மலர்ந்தார் ரேகா…

இன்று இந்த தம்பதிகளிடம் பாரம்பரிய அரிய வகையான அரிசி ரகங்கள் மற்றும் பயறு வகைகள் ஏறாளமாக உள்ளது .

மேலும் இன்று( ஏப்பரல்5 முதல் 9 தேதிகள்) எதிர் வரும் ஞாயிறு வரை விவசாய மாநாடு இவர்களின் தோட்டத்தில் நடைபெற்றுகிறது…

நமது தலைமை நிருபர் – சங்கரமூர்த்தி – 7373141119

img-20161019-wa0012