குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..!

45
587
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..!
Advertisement

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..!

Advertisement

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி 33 ஆண்டுகளாக சிறந்த கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

மேலும் இக்கல்லூரி மாணவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் சிறந்த தலைவர்களாகவும் வளர்ச்சிக்கான பங்களிப்பாளர்களாகவும் சேவை செய்து வருகின்றனர்.

KCT-யின் பட்டமளிப்பு விழா தனித்தன்மை வாய்ந்த ஒரு நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் வெற்றியை,

அவர்களோடு இணைந்து பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் பெருமையுடன் கொண்டாடும் விழா இது.

அவ்வகையில் இந்த வருடமும் புதிய பட்டதாரிகளை வருங்காலத்துக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.

2016 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா, 2017 ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு 13 இளங்கலை பொறியியல் துறைகள் மற்றும் 14 முதுகலை துறைகளில் இருந்து 1800 மாணவ மாணவியர் பட்டம் பெறவுள்ளனர்.

திரு. மசூத் ஹுசைனி, துணைத் தலைவர், டாட்டா மேம்பாட்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும்

திரு. ரமேஷ் டட்லா, தலைமை நிர்வாக அதிகாரி,எலிகோ லிமிட்டெட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பட்டமளிப்பு விழாவில், துறைகள் தொகுக்கப்பட்டு, 3 அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் நாள் நிகழ்வில், திரு. ஷங்கர் வாணவராயர், இணை தாளாளர், KCT, தமது வரவேற்புரையில் பட்டம் பெறுபவர்கள் உடல்/மன ஆரோக்கியத்துடன்,

உயரிய பண்புகளுடன் அனைவருக்கும் எடுத்துகாட்டாய் திகழவேண்டும் என்று கூறினார். கல்லூரியின் தாளாளர் திரு. ம.பாலசுப்ரமணியம், விழாவினைத் துவக்கி வைத்தார்.

    

கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆர். எஸ். குமார், தமது தலைமையுரையில் கல்லூரி மற்றும் மாணவ மாணவியரின் சாதனைகள் பற்றியும்,

கல்லூரியின் அண்மைக்கால புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் திரு. மசூத் ஹுசைனி மாணவ மாணவியர் தனித்தன்மையுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைச் சான்று காட்டி, தங்கள் கனவுகளை அடைவதற்குப் பயன்களை எதிர்பார்க்காமல் முயற்சிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

பட்டதாரிகள் தங்கள் பெற்றோருடன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

                       

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119