காஷ்மீரில் துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதி!

Advertisement
Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதி!

சுமார் 2500 வீரர்கள் கான்வாய்கள் மூலம், காஷ்மீரில் பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தாக்குதல் நடைபெற்றதால், ஒரே சமயத்தில் இவ்வளவு வீரர்கள் சென்றது ஏன்? எனவும், விமானப் பயணிக்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த சூழலில் ஜம்மு மற்றும் காஷ்மீர் செக்டாரில் சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையினர் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, டெல்லி – ஸ்ரீநகர், ஸ்ரீநகர் – டெல்லி, ஸ்ரீநகர் – ஜம்மு, ஜம்மு – ஸ்ரீநகர் பயணத்திற்கு ஜவான்களுக்கு விமான வசதி செய்து தரப்படும்.

இது பணிக்கு திரும்பும் போது, விடுப்பில் செல்லும் போது பொருந்தும். இந்த சேவை முலம் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 7,80,000 சி.ஏ.பி.எப் வீரர்கள் பயன்பெறுவர்