திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்…!

0
105
திட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்...!
Advertisement
Advertisement

சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,

கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின் போது, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ சார்பில் கூறினர்.

இந்த வழக்கு இன்று சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கால அவகாசம் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தாக்கல் செய்த மனுவை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திரும்ப பெற்று கொண்டனர்.

இதனால், இந்த அமைப்பினரின் போராட்டம் திட்டமிட்டபடி வரும் 22ம் தேதி முதல் நடக்கும்.