புல்வாமா தீவிரவாத தாக்குதல்: அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை..!

புல்வாமா தீவிரவாத தாக்குதல்: அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை..!
Advertisement
Advertisement

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 45 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 2 தமிழக வீரர்களும் அடங்குவர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தீவிரவாத ஒழிப்புக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.

இந் நிலையில், காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது.

உள்துறை அமைச்சகம் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

நாடாளுமன்ற நூலக அரங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் தொடங்கி உள்ளது.

குலாம் நபி ஆசாத்(காங்), ஆனந்த் சர்மா (காங்), சரத்பவார்(தேசியவாத காங்கிரஸ்) உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்தும் அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளும் வரவேற்கப்படும் என்று தெரிகிறது.